கவலையாக மாறும் சந்தோசம்.. கடவுளுக்கு மட்டும்
01.
கவலையாக மாறும் சந்தோசம்
--------------------------------------
ஊருக்காய் ஒன்றுகூடி
பிள்ளையாரை
களவெடுத்து வந்து
பிரதிருஷ்டை செய்த
சந்தோசத்தை
கவலையாக
மாற்றிக் கொண்டிருக்கிறது….
அடுத்த ஊரில்
பிள்ளையாருக்கு
கோயில் கட்டும் சேதி!
02.
கடவுளுக்கு மட்டும்
--------------------------
வரவேற்பு வளைவு
வண்ண விளக்கு
வாடகை கார்
வரதட்சணை
பரிசு பரிமாறல்
ஏதுமின்றி
பள்ளியறை புகுதல்
சாத்தியமாகிறது......
கடவுளுக்கான
திருமணங்களில் மட்டும்!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-01-01