Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

நிம்மதி என்ன விலை போகுது???

- தமிழ்ப்பொடியன்

நிம்மதி என்ன விலை போகுது???
-----------------------------------------

ஊரில் இருக்கும் நண்பா நலமா?
நீயும் “வெளிநாட்டுக்கு “ வரப்போகிறாய் என்று சொன்னாய்...!!!

காசு கொடுத்து சந்தோசங்களை விலைக்கு வாங்கும் நான்
சந்தோசங்களை விற்று காசை விலைக்கு வாங்க ஆசைப்படும் நீ

எனக்கு சம்பளம் டொலர்களில்
உனக்கு வெறும் ரூபாய்களில்

ஆனால்....

உனது சந்தோசங்களின் பெறுமதி டொலர்களில்
எனது சந்தோசங்களின் பெறுமதி ரூபாய்களில்....

உண்மையாக நேர்மையாக உழைத்தால்
உனது மாத சம்பளம் தான்
எனது மாத இறுதி சேமிப்பு

இதுதாண்டா உனக்கும் எனக்கும் இப்போது வித்தியாசம்..

ஆனால் உனக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு
நீ ஊரில இருந்தும் அகதி
நான் சிற்றிசன் கிடைச்ச அகதி....!!!

நண்பா....
குச்சு ஒழுங்கைகளிலும் வெண் மணல் வெளியிலும்
தொலைத்த சந்தோசங்களை
இங்கே அதிவேக வீதிகளிலும்
சீமெந்து காடுகளிலும் தேடுகிறோம்.

நான் நேரத்துக்கு நித்திரை கொண்டு நான்கு வருடங்கள்....
நிம்மதியாய் நித்திரை கொண்டு ஆறு வருடங்கள்...!!!

இதையே வைரமுத்து பாட்டில் சொன்னால்
மண்டையை மண்டையை ஆட்டிக் கேள்
சங்கர் படமாய் எடுத்தால் விசிலடித்து கைதட்டு

உன் ”நண்பன்” நான் சொன்னால் மட்டும்
கொடுப்புக்குள் சிரித்து நக்கல் அடி..!!!

கனவுகளை விற்று நித்திரைகளை விலைக்கு வாங்காதே
விரல்களை அடைவு வைத்து தூரிகைகளை
வட்டிக்கு வாங்காதே....!!!!

நண்பா
டொலர்களை அனுப்புகிறேன்
சில்லறைகளாய் தொலைந்து போன என் சந்தோசங்களை
வாங்கி அனுப்பு.....
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-11-29


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • உறவுகள் கருகுதையோ...!!!
  • முடிப்பேன்.. தவிப்பு
  • போ வெளியே புத்தனின் “புத்தா”...!!!
  • சிந்தனையில் தீ.. தீயினை கண்களில்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube