நண்பனின் மரணம்
------------------------
வலிகளை உணர்த்தியது
நண்பனின் மரணம்
துவண்டுபோகிறேன் நான்
என்னைச் சுற்றியுள்ளவர்கள்
ஏதோதோ பேசி
பதறுகிறார்கள்
கோபங்கொள்கிறார்கள்
அமைதியாகிறார்கள்
பிறத்தலுக்கும்
இறத்தலுக்கும்
இடையிலான வாழ்வியலை
விளங்கிக்கொண்டாலும்
இருந்தும் ஏனோ
என்னால் மட்டும்...
எதையுமே
ஏற்றுக்கொள்ள முடியவில்லை
- எதிக்கா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-09-10