Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

ஏழை நீயிது.. பிறப்பித்தாள்

- எசேக்கியல் காளியப்பன்

ஏழை நீயிது மறவாதே!..பிறப்பித்தாள் தனையென்றும் மறக்காதே..

01.
ஏழை நீயிது மறவாதே!
------------------------------------
பார்த்து இரசி
படுத்துத் தூங்கு
பாடி எழுப்ப நினையாதே!
கூர்த்த மதியினர்
கோடியில் உள்ளனர்
கூவி யழைக்க முனையாதே!
சேர்ந்து நின்றிடு
செய்கை யற்றிறு!
சேதம் கண்டு கொள்ளாதே!
ஊர்ந்து செல்பவர்
ஊரில் பலபேர்
உதைத்துக் கொண்டு செல்லாதே!
எங்கே இலவசம்
அங்கே சென்றிடு!
எதையோ நினைத்து மறுக்காதே!
இங்கே விதிவசம்
இதுவே பரவசம்
ஏழை நீ அது மறவாதே!



02.
பிறப்பித்தாள் தனையென்றும் மறக்காதே..
-----------------------------------------
மறக்காதே இமைப்பொழுதும்
பிறப்பித்தாள் தனை,உன்னுள்;
இறப்புள்ளும் உனைநினைத்தே
இருப்பவளைத் தவிப்பவளைச்
சிறப்புடனே வைப்பதுதான்
சீருனக்கு மறவாதே!

வான்தாங்கு மழைபோல
வயிற்றுக்குள் வளர்த்தவளைத்
தான் தாங்கி நிற்கையிலே
தனைஉதைக்கச் சிரித்தவளை
நீதூங்க விழித்தவளை,
நீஏங்க அழுதவளை ,
உன்,உயர்வில் மகிழ்ந்தவளை
உன்,தாழ்வில் அணைத்தவளை
உச்சிதனை முகந்தவளை
உன்,ஊக்கம் வளர்த்தவளை
எத்தனைதான் துயர்வரினும்
ஏற்றவளாய், அரசுகளின்
தொட்டிலிலே உனைக்கொண்டு
இட்டுவிடாக் கையவளை,
மறக்காதே இமைப்பொழுதும்
பிறப்பித்தாள் தனை,உன்னுள்;

விண்காட்டி மதிகாட்டி
வெறுஞ்சோறு தந்தவளைக்
கண்ணீரில் மூழ்கவிட்டுக்
கையாட்டிச் செல்வாயோ?
கடல்கடந்து போயுமவள்
கண்கடந்து போவாயோ?
காசுபணம் பெரிதாமோ?
ஆசிரமம் அவளிடமோ?
இறந்தவளைக் காண்பதற்குப்
பறந்துவரல் ஆகாதோ?
மணமென்று பூதனக்குள்
மறைத்துவைத்துக் காத்தவளைப்
பிணம்என்றும் ஒதுக்கிடவோ?
பணமனுப்பி மறந்திடவோ?
இறப்புள்ளும் உனைநினைத்தே
இருந்தவளைத் தவித்தவளை
மறக்காதே இமைப்பொழுதும்!
சிறப்புனக்கு எதுவென்று
சிந்திக்க மறவாதே!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-09-10


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • புகழ்வழி நடப்போம்..இயற்கையுடன்..
  • ஒரு குடிமகனின் தீர்மானம்!..தமது முயற்சி
  • மீண்டும் பிறந்திருப்பேன்..! சரித்திரத்தின்
  • தூற்றி உயர்.. கதை.. இனிக் கனவு
  • குழுக்களா.. கூட்டமு..நல்லறி..வெருவினார்
  • உண்மையின்..புலம்பி ஆகுமோ..ஆட்சி

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube