இசையால் இம்சிக்கப்பட்டவன்
-----------------------------------------
உன் வாசனையில் நெருங்கி வரும்
நினைவுகளின் வேரில்
எனக்குள் படர்கின்றது
இனியதொரு காலம்.
சலிக்காமல் அவிழ்கிறது
கண்ணீர்ப் பூக்கள் .
நீ கடந்து சென்ற தெருவில்
இன்னும் இசைத்துக் கொண்டிருக்கிறது
நீ தீண்டாமல் போன
ஒரு புல்லாங்குழல் .
மொழியை இழந்து படுகின்றது
ஏதேதோ காதல்களை
என் இசையில் நிரம்பித் தவிக்கின்றது
உன் அர்த்தங்கள் .
பிறிதொரு நேரத்து வாசனையில்
நான் வேறொரு
வாத்தியமாகியிருந்தேன்
நீ என்னை நினைவுகளால்
வாசித்துக்கொண்டிருந்தாய்
- கிரிஷாந்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-07-04