Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

கருவறை.. தலைமுடி

- வசிகரன்.க

கருவறை.. தலைமுடி

01.
கருவறை..
-------------------

இருவரின் கூட்டு முயற்சி ..!
இரண்டு நிமிட உழைப்பு ..!!
இரண்டு துளி வெண்மணி ,
பயணிப்பதோ பலமணி .!!!

இறுதியில் உறைவது
சூரியன் புகா நிலவறை !
உண்டு உறங்கும் ஓர் அறை.!!

சுவாசிக்க ஓர் உறை.!
சுதந்திரமாக வாழும் பாசச்சிறை.!!
ஒன்பது மாதம் வாசிப்பதுதான் முறை ..!!!
அதற்குமேல் வாடகை கொடுத்தாலும்
இருக்கமுடியாது என்பது பெருங்குறை ..!!!!

கடவுள் மனிதனுக்கு கொடுத்த திருவறை..!
விலைமதிப்பில்லா ஓர் அறை .!!
எத்தனை சிறிய ஜான் இடம் ,
இதற்குள் உறைவது
எத்தனை பெரிய மானுடம் ..!!!


02.
தலைமுடி
------------------

உயரத்தில் இவன் குடியிருப்பு ,
உதிர்ந்தபின் இல்லை மதிப்பு ,
தலையில் இருக்கும் வரை
அப்படி ஒரு கவனிப்பு ,
தவறி உணவில் விழுந்தால்
அப்பப்பா ! என்ன ஒரு சலிப்பு ...!!

இவனுக்கு இல்லை மறுபிறப்பு ..!
இன்றுவரை யாரும் முடிக்கவில்லை
இவர்களின் கணக்கெடுப்பு ..!!
உள்ளவரை தலைக்கு
அழகான கரும்பொன் காப்பு ...!!!
உலர்ந்து உதிர்ந்தபின் மனிதன்
உள்ளாகிறான் பரிகாசிப்புக்கு ..!!!!

பெண்ணின் அழகுக்கு வேண்டும்
இவன் அருள்பாலிப்பு .!
மனமிருந்தால் கொடுக்கலாம்
சிறப்பு பாதுகாப்பு .!!
மணமில்லை என்பது
இவனின் தனிச்சிறப்பு ..!!!

இளமையில் இவன்
நிறமோ கருப்பு .!
நடுதர வயதில் மாற்றங்களால்
வரும் வெளுப்பு ..!!
இவனை வைத்து
கொலையாளியை பிடிக்கலாம் என்பது
அறிவியலின் கண்டுபிடிப்பு ..!!!

மொத்தத்தில் இவனை
பேணிகாப்பது என்பது
நம் பொறுப்பு .!
இருப்பதை விட்டு
இழந்தபின் புலம்புவது என்பது
பொறுப்பற்ற பிழைப்பு ..!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-04-28


Join the Vaarppu Community

Log In Register

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube