என்ன கண்டாய்?
-------------------------
மண்மானம் காக்க; மக்கள்
கடமையைப் போக்க; தேசம்
உன்ஞானம் வேண்டி நிற்க
உதவாத காதல் கொண்டாய்!
தன்மானம் இழந்து நின்றாய்
தகுதியும் மறந்து சென்றாய்
சன்மானம் என்ன கண்டாய்?
சாம்வரை கண்ணீர் தானே!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-04-28