உருதுக்கவிதை. கவிஞர் தர்ணம் ரியாஷ் (Tarannum Riyaz)
பழைய புத்தகம்
===============
புதிய ஓளி
புரியாதச் சுவை
அறிமுகமில்லாத அறிமுகம்
இன்னும் தெரியவில்லை
நீ யாரென்று!
ஆனாலும்-
உன் இனிய நினைவுகள் மட்டும்
பழையப் புத்தகத்தின் வாசனையைப் போல
என் உள்ளத்தில்.
உறவுகள் தொடரட்டும்
======================
நண்பர்களின் சந்திப்பு தொடரட்டும்
தொலைபேசியிலாவது தொடரட்டும்
இன்று மறந்தால்..
நாட்கள் மாதங்களாகும்
மாதங்கள் ஆண்டுகளாகும்
ஆண்டுகள் கடந்து
தொலைபேசி அழைத்தால்....
தொலைபேசியின் எண்கள் மாறியிருக்கலாம்
தொலைபேசியே இல்லாமல் போயிருக்கலாம்
ஏன் அவனும் கூடத்தான்.
மொழிபெயர்ப்பு : புதியமாதவி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-04-30