புதிய வருடத்தை வரவேற்கிறேன்
------------------------------------------
நாளைக்கு என்பது நிச்சயம் இல்லை
என்று அறிந்தபின்னும்
புதிய வருடத்தை வரவேற்கிறேன்
இன்றைய வாழ்வை இனிதாய் வாழ !!
புதிய வருடத்தை வரவேற்கிறேன்
இருக்கும் நிமிடங்களில் இனியதை செய்ய !!
புதிய வருடத்தை வரவேற்கிறேன்
இன்பத்தை சுவைக்க!!
புதிய வருடத்தை வரவேற்கிறேன்
உறவுகளின் உன்னதத்தை அறிய !!
புதிய வருடத்தை வரவேற்கிறேன்
இயற்கையே நமக்கு எதிராக திரும்பினால் !!
புதிய வருடத்தை வரவேற்கிறேன்
தீமை செய்தவருக்கும் நன்மை செய்ய !!
புதிய வருடத்தை வரவேற்கிறேன்
நன்மை செய்தவரை நாளும் நேசிக்க !!
புதிய வருடத்தை வரவேற்கிறேன்
உதவி செய்தவர்களின் உள்ளம் குளிர்விக்க !!
புதிய வருடத்தை வரவேற்கிறேன்
மனிதாபிமான மனித உள்ளங்களை இனம்காண !!
புதிய வருடத்தை வரவேற்கிறேன்
போர் இல்லாத உலகம் காண !!
புதிய வருடத்தை வரவேற்கிறேன்
புன்னகையை மட்டும் வீசும் உதடு காண !!
புதிய வருடத்தை வரவேற்கிறேன்
பிரிவினை இல்லாத சமூகம் காண !!
புதிய வருடத்தை வரவேற்கிறேன்
ஒற்றுமையான உலகம் காண !!
வரவேற்கிறேன் உங்களுடன் நானும் ..................!!!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-01-19