மறுபடி பிறப்பீர்களா ?
செய்தி கேட்டபோது
செவிகள் செயலிழந்தன
உடல்கள் எரிந்த சடலங்களை
ஒவ்வொன்றாய் கண்டபோது
ஐயகோ ! எதையும் தாங்கும்
இதயங்கூட இரண்டாய் பிளந்துவிட்டது
பிஞ்சு உள்ளங்களைப் பிணமாகக்கண்ட
நெஞ்சு இரண்டாய் பிளந்துவிட்டது
தாம் பெற்ற செல்வங்கள்
சவமாகிப் போனதை
தாளாமல் தவிக்கும்
தாயுள்ளம் கண்டு
மீளாமல் எழுதுகிறேன்
உஷ்ணத்தின் கொடுமையில்
உயிர்விட்ட கண்றுகளே
உலகமே அழுகிறது
தமிழகத்தை தட்டி எழுப்பிய
தங்கங்களே தூங்கிவிட்டீர்களே
விதிமீறல் நடந்ததனால்
விண்ணுலகம் சென்றீரே
மாசற்ற உள்ளங்களே
மழலைப் பிஞ்சுகளே நீங்கள்
மறுபடி பிறப்பீர்களா ?
G.T. Arasu
2424 S.Beretania St, Apt # 303
Honolulu, HI 96826
808-3430949
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-04-30