அழகுச் சொல்லொன்று வேண்டும்
---------------------------------------------
அழகுச் சொல்லொன்று வேண்டும்
அறிவெது சொல்லிடத் தான் வேண்டும்
இழியது இவ்வுலகில் இல்லை
இயற்றிய பொருளில் வாழ்ந்தால்
என்று சொல்லிடவும் வேண்டும்
தொடர்கதை போலன்று வாழ்வு
விட்டுத் தொடர்ந்திட முயன்றால்
துரத்திடும் சாவு
என ஓதிடவும் வேண்டும்
கொடியது இவ்வுலகில் இல்லை- அனைவரும்
கொற்றவர் ஆவதும் இல்லை - வாழ்வில்
தோல்வி என்பது இல்லை - வாழ்வை
வென்றார் எவரும் இல்லை
என ஓங்கி உரைத்திட வேண்டும்
அன்பைச் சொல்லிடவேண்டும்
ஆனந்தம் எதுவென்றும் சொல்லும்
அழகுச் சொல்லொன்று வேண்டும்
செந்தமிழ்ச் சொல்லொன்று வேண்டும்
சென்னியில் உரைத்திட வேண்டும்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-10-02