இறைவன்
எனக்காக அங்கே தூரத்தில்
எனக்கான ஆயிரமாயிரம்
சந்தோஷ மூட்டைகளை
சுமந்துக் கொண்டு நிற்கின்றான்
எத்தனை முறை தோற்றுப்போனாலும்
யாருக்குமே இல்லாத நம்பிக்கை
என் மீது அவனுக்கு
எனக்காவது தோற்றுப்போவதற்கும்
நோக்கம் உண்டு
அவனுக்கு ?
- அகிலன் லெட்சுமணன்
தொலைந்த கடவுள்
தொலைந்துப் போன கடவுளை
எல்லோரும் தேடினார்கள்
பிரதிஷ்டை செய்வதற்கல்ல
மீண்டும் தொலைப்பதற்கு
- அகிலன் லெட்சுமணன்
A33-4-38, Jalan Puchong Permai 1/14
Taman Puchong Permai
47100 Puchong, Selangor
012-2581393
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-04-30