இதமாய் இனிக்கிறது
------------------------
ஒருமுறை உன்னை பார்த்தேனே -என்
இதயம் உடைந்ததடி
மறுமுறை உன்னை ரசித்தேனே -என்
இளமை கொல்லுதடி
நீ முத்தம் சிந்தவில்லை - ஆனால்
இதமாய் இனிக்கிறது
நீ கவிதை பேசவில்லை -ஆனால்
மனசும் இசைக்கிறது
விழியினில் விழுந்திட்ட ஒரு விதை நீ
நினைவினில் வளர்ந்திடும் ஒரு செடி நீ
உயிரினில் உலவிடும் ஒரு மதி நீ
உதட்டினில் பிறந்திடும் ஒரு மொழி நீ
பூக்களின் இதழில் உந்தன் வதனம்
நிலவின் மடியில் உந்தன் புருவம்
கண்களை திறந்தாய் பகலின் ஜனனம்
கூந்தலை கலைத்தாய் இரவின் மரணம்
காதல் செய்தேன் உன்னை மட்டும்
கனவில் காப்பேன் உன்னை மட்டும்
நெஞ்சில் சுமந்தேன் உன்னை மட்டும்
என்னுயிர் கொடுப்பேன் உனக்காய் மட்டும்
முளைக்கின்ற தடங்களில் இருப்பிடம் அமைத்தேன்
சிரிக்கின்ற விழிகளின் புதுமொழி படித்தேன்
தவிக்கின்ற நிழலிடம் முகவரி கொடுத்தேன்
பிரிகின்ற நொடியினில் என்னுயிர் விடுவேன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-09-05