காத்திருந்த காதல்
--------------------------
பார்த்த நாள் முதலாய்
பேச துடித்தேன்
பேசிய நாள் முதலாய்
பழக தவித்தேன்
பழகிய நாள் முதலாய்
பார்வையில் ஏங்கினேன்
உன் சம்மதம் பெற....
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு விதமாய் வினவி
உந்தன் மறுமொழி கேட்க
எந்தன் உள்ளம்
ஏங்கிய நாட்கள்
எழுத்தில் எழுத முடியாத
கண்ணீர் காவியங்கள்...
மௌனமே உன் பதிலாய்
பார்வையே என் வழியாய்
பயணப்பட்டு.......
காலத்தின் கோலமாய்
காட்சிகள் மாறி
சதியின் துணையோடு
விதியின் மதியால்
வெவ்வேறு திக்கில்
விலகினோம்.....
விடை தெரியாத விடுகதையாய்
விளங்காமல் என் வாழ்வை
திசை தெரியாத மையிருட்டில்
தெளிவில்லா பாதையில்
முடிவில்லா பயணமாய்...
காலசுழச்சியில்
வாழ்வை தொலைத்த
இருவரும் ஒருவழியாய்
ஒருவிழாவில்
ஒன்றாய் கலந்தொமே....
திசை மாறிய பறைவைகளாய்
திசை மாறி சென்று
உருமாறி இப்பொழுது....
அன்று பார்த்த
அதே நிலவாய்
இன்றும் நீ....
பார்வைகள் கலந்தோம்
யார்வரவையோ எதிர்பார்ப்பதாய்
என்னை பார்த்தாய்....
அதே பார்வை
அதே மௌனம்
என் கண்கள் பனித்தது....
ஒருவழியாய் விழாமுடிய
எதிரெதிர் திசையில் நடக்கையில்
என் விழிகள் உன்மீது...
உன் விழியில் நீர்த்துளி
உன்னுள் இன்னும் நான்
இருப்பதை உணர்த்துவதாய்....
- ரிஷ்வன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-09-05