இடரும் தருணங்கள்
------------------
by :- அவதானி கஜன்
விட்டு விட்டு வெளித்தெரியும் வேண்டாத முகம்
விளைவிற்கான காரண நிகழ்வுகளால்
சுயத்தைக் கொல்லும் நினைவுகள்
அன்பாய் தெரிந்தவனும் மனதில் தள்ளி நிற்க
உள்ள அலைச்சலில் சவமாகி
தொல்லியின் உறைவிடமாய்
இடரும் தருணங்கள்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-04-30