தலைப்புத்தேடும் கவிதைகள்
------------------------------------
சேலை
அதிகாலையில் எப்போதும்
மூடுபனிச்சேலை கட்டி,
மோகமுள் கொண்டு நிற்பாள்
என் வீட்டு வெள்ளை ரோஜா.
அனுதினமும் வந்து
வேகமாய் துயிலுரித்து
தாகமாய் முறைப்பான்,
சூரிய துரியோதனன். !!
---
என்றும்,
தணியாததோர் தேகதாகம்.
எதற்கும்,
பணியாததோர் தாகதேகம்.
முற்றும் துறந்தவனையும்
விட்டுவைப்பதில்லை.
மண்டியிடவே வைக்கிறது
இந்தியத்தொலைக்காட்சிகளின் முன்.!!
---
எந்த நொடியிலும்
சறுக்கி விழுந்தோடி
சாகவும் துணிந்துதான்,
இந்த நொடியிலும்
ஜூலியட் ரோஜாவின்
சுழல்போதை இதழ்மேல்
குலைந்து நிற்கிறதோ
அந்த அதிகாலை தேசத்து
ரோமியோ பனித்துளி. !!!?
---
காதலில்
உனது வாழ்வு, பயணம்
எனது வாழ்வு, பணயம்.
வாழ்வில்
உனது காதல், முதலீடு
எனது காதல், முறையீடு.
என்னில் உனது காதல், காமம்
உன்னில் எனது காதல், காயம்.
மண்ணில் நமது காதல், பாடம்.
- ஷக்தி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-07-03