Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

தமிழின் முன்னுரை

- பாஸ்கர் சூர்யா

தமிழின் முன்னுரை
-----------------------------

அன்னையே...நீ.. அதிசயங்களின் பாசறை
அன்பின் கருவறை..என் அழகுத் தமிழின் முன்னுரை..

கண்ணுக்கு தெரிகின்ற கடவுள் நீ தானே..!சில நிமிடம் நான்
காணாமல் போனாலும் கண்உறக்கம் இழப்பவள் நீ தானே..!

ஐந்திரு மாத கருவறையில் என்னை காத்தவள் நீ தானே..! என்
ஐம்புலன் நலமின்றியும் எனை அழகனென்பவள் நீ தானே..!

மழலையாய் செய்த தவறை மகிழ்வோடு ரசித்தவள் நீ தானே..! இன்று
மமதையால் செய்த தவறால் என்னோடு கலங்குபவள் நீ தானே..!

பயணங்கள் தரும் சோகங்களில் நிழலாய் தொடர்பவள் நீ தானே..! நான்
பயன்படாதவன் ஆனாலும் என்மேல் பாசமாய் இருப்பவள் நீ தானே..!

கல்லில் தடுக்கி விழுந்தபோது அந்த கல்லை அடித்தவள் நீ தானே..! என்
கண்ணீல் தூசு பட்டால் கலங்குபவளும் நீ தானே..!

வேலையின் தாமதத்தில் சில நிமிடம் ஆனாலும்
வீட்டுக் கதவின் நிலையாய் மாறுபவள் நீ தானே..!.

உண்மையன்பு ஊறுகின்ற ஊற்று நீ தானே..!
உனக்கு உதவாதவன் நானாலும் என்
உச்சிமுகர்ந்து மீது முத்தம் தருபவள் நீ தானே..!

தொலை தூரம் பயணத்திலே என்னோடு
திருநீறாய் வருபவள் நீ தானே..! அந்த திருநீறும்
கண்ணில் பட்டு கலங்கிடுமோ கண்..? என அதை ஊதி
கலைத்தவள்.. நீ தானே..!


அன்போடுஇதமிழ்ப்பண்போடுஇதேசப்பற்றோடு என்
தேகத்தை வளர்த்தவளே..!

இன்று என்னை தவியாய் தவிக்கவிட்டு
தனியாய் சென்றது நீ தானே..?
சோகம் கொண்டு நான் வாடும் போது
எனை தேற்றுவது நீ தானே..!
நீ பிரிந்த சோகத்துடன் நான் அழுகிறேன்..

என் கண்ணீர் துடைக்க நீ வருவாயா..?
என் உச்சி முகர்ந்து அன்பு முத்தம் தருவாயா..?
உன் மடியில் கண்ணுறங்க சில நொடி எனக்கு தருவாயா..?

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-05-15


Join the Vaarppu Community

Log In Register

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube