தனிமையின் பிடியில்
-------------------
மதியழகன் சுப்பையா
மும்பை
ஒன்று
புத்தகங்களை
புரட்டியாயிற்று
தொலைக்காட்சியின்
அலைவரிசைகளையும்
அலசியாயிற்று
நான்கைந்து முறை
தேனீர் குடித்தாயிற்று
கோட்டோவியத்தில்
உருவம் எழுத
முயற்சித்தாயிற்று
இறுதியாய்
கவிதை எழுத அமர்ந்தேன்
வெறுமை நீங்கி
இருமையாகிப் போனேன்.
இரண்டு
கிறுக்கல்கள்
கிழிசல்கள்
சிதிலமடைந்த சுவர்கள்
ஓவியப் பரப்பாய் விரிகிறது.
சிறிய அசைவுகள்
நிச்சய விணைகள்
அற்ப பொருட்கள்
உன்னத இசையாய்
ஒலிக்கிறது.
தட்டப் படாத கதவு
ஊமையான தொலைபேசி
வெளிச்சமில்லா வீடு
அடிக்கடி திறந்து
மூடப்படுகிறது
கழிப்பறையின் கதவு.
மூன்று
இன்று காலை
பேரூந்தில் பார்த்தவள்
தொடங்கி
பட்டியல் முடிந்து போகவே
தளர்ந்த நடையுடன்
வண்ண அட்டை
வார இதழ் தேடுகிறேன்
உருவங்கள் வேண்டி.
நான்கு
ஒற்றை பிம்பம் காட்டி
அலுத்துக் கொள்கிறது
நிலைக் கண்ணாடி.
இளையராஜாவின்
இசையில் பிசிரடிக்கிறது.
ஆயுள் தூக்கம்
தூங்கியாயிற்று.
புழுங்கி நாறுகிறது
உடலும் உடையும்.
சுவர்கள் நெருங்க
பரப்பு குறைகிறது.
காற்று வரவே
கதைவை திறந்தேன்.
கூறை அகற்றினால்
ஒளியும் வருமே.
ஐந்து
எலிகளுக்கு
விசம் வைப்பதில்லை.
ஒட்டடை அடித்து
காலங்களாகி விட்டது.
கரப்பான்களுக்கும்
பாட்சைகளுக்கும்
மருந்து தௌ¤ப்பதில்லை.
கொசுவத்திகள்
கொளுத்துவதே இல்லை.
ஆனாலும்
எப்பொழுதாவது
வாசல் வழி
எதிரொளி மட்டுமே
எட்டிப் பார்க்கிறது.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01