Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

குழந்தையின் கனவுகள்

- ந.மயூரரூபன்

குழந்தையின் கனவுகள்
--------------------------------

ஊதி ஊதி மூட்டுந்தீ
குழந்தைகளினுலரும்
கனவுகளின் நுளைவழி தேடிச்
சதிராடி மரவிருள் பிணைந்து
தொங்குகிறது.

குழந்தைகளின் கனவுகள் பார்த்திருக்க
ஓடிக்கொண்டிருக்கிறது
அதனீரம் பறித்த மாய ஆறு.

தகிக்குமெங் கனவுகள்
தொடமுடியா மாய ஆறு அது.
ஈரந்தொலைத்த சேதி
ஆற்றுப்படுகையில் விழுந்து
முட்கம்பியோரமாய்
திக்கற்றலைகிறது.
மரவிருள் தின்னச் சுருண்டிருக்கிறது.

கனவுகள் உலருமோசை
வண்ணங்கள் புதைந்துபோன
நிலமெங்கும் கேட்கிறது.
மாய ஆற்றின் சலசலப்பும் உதிர்ந்தழிகிறது.

ஓசைகளுடையும் சடசடப்பில்
மரவிருள் மிடைத்து வருந்தீ
வகுந்தேறுகிறதெங்கும்.
கனல் கக்கும் பொழுதொன்றில்
குழந்தையின் கனவுகள் தீயில் நனைகின்றன.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-04-26


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • சித்து.. பார்த்தவர்கள் யாருமில்லை
  • பதற்றம்.. அலைவு
  • அவிழ்.. உயிர் வளையம்
  • காலமும் நானும்
  • தனிமை

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube