Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

ஆண்டவனுக்கு எச்சரிக்கை

- சின்னு (சிவப்பிரகாசம்)

ஆண்டவனுக்கு எச்சரிக்கை
---------------------------------------

ஒத்தைக் கல் நட்டி
ஒரு பொட்டுச் சந்தனமிட்டு
உண்டு மீந்த பணியாரத்தை
கற்றாழையில் படையலிட்டு
ஒட்டியாணம் போன்று
அவரைக்கொடி அணிவித்து
முழு நிலவொளியில்
வெங்கக் கல் பளபளக்க
விளையாட்டு சிறுசுகள்
ஆக்கிவைத்த கடவுளை
துச்சமென்று ஒதுக்கி

வானையும் மண்ணையும் மறைத்து
வளர்ந்த கட்டிடத்தில்
கடவுளை அடைத்து
பன்னீரில் குளிப்பாட்டி
பல்லக்கில் ஏற்றி
ஆண்டுக்கு ஒருமுறை
அவன்படைத்த உலகை காட்டும்
கனவான்களே

எத்திசை நோக்கி
உம் கரம் நீட்டினால்
அத்திரு கடவுள் உம்மை நோக்குவன்
எனச் சொல்லும் பெரியோர்களே

உருவமுள்ளது கடவுள் ஆகுமா
என வாதிடும் ஆன்றோர்களே

பாலகரின் படிதளுக்கு
தன் தாள் படியாது
பல்லக்கில் அவன் பவனி வந்தால் ,

பிள்ளை வடிவம் கொண்டு
பலகரோடு பழக
உருக்கொண்டு அவன் வர தவிர்த்தால்

ஆண்டவனே ஆனாலும்
ஆண்டாண்டு காலமாய்
எமை ஆண்டவனே ஆனாலும்
அவன் எம் குலப் பகைவன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-02-04


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கடவுளை பார்த்திடில்!
  • காதலில் தோற்றவன்
  • பெண் பார்க்கும் படலம்
  • புதுமை பெண்
  • தலைவி..
  • அயல் நாட்டு இள.. கண்டதும் காதல்
  • உயிர்த்து எழு.. அழைக்கும்.. அழகு
  • அழகுச் சொல்லொன்று வேண்டும்
  • பூக்கட்டும் புதிய புன்னகை.. ஏன் சினம்
  • தனிமையில்.. பூக்கட்டும் புதிய புன்னகை
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube