Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

கைவிடப்பட்ட மந்தைகளும்

- பிடுங்கி

கைவிடப்பட்ட மந்தைகளும்,
கரணம் போடும் மேய்ப்பர்களும்....
--------------------------------------------------------------------------------

கோடைஇடியிடித்து
வானம் மின்னியது.
பூமி நடுங்கியது.
கரு நாகங்கள் மேலெழுந்து ஊரத்தொடங்கின!!
நரிகள் பிலாக்கணமிட்டழுதன!
மந்தைக் கூட்டம் சிதறியது.......
எது திசை??? எது போகுமிடம்???
தெரியாது திகைத்தன மந்தைகள்.
மேய்ப்பர்களின் கையசைவிற்காய்
ஏங்கித் தவித்தன அவை.
மேய்ப்பர்களைக் காணவில்லை
கைவிட மாட்டார்கள்.
நம்பிக்கையோடு,
மேய்ப்பர்களைத்தேடத்
தொடங்கின
மந்தைகள்!!!
வனாந்தரங்களில்.....
கட்டாந்தரைகளில்....
முகாம்களில்....
காடுகளில்.....
சுடலை வெளிகளில்.....
தெருவோரங்களில்......
எங்கு மேய்ப்பர்கள்???,எங்கு மேய்ப்பர்கள்???
தேடித் தேடியே
மந்தைகள்
வாழ்விழந்தன.
எல்லை புகுந்தவை
வக்கிர புத்திக்காரரின்
வக்கிரத்துக்குப் பலியாகிப் போயின.
பாளும் உயிரைக் கையில் பிடித்து
பசிவயிற்றோடு
நாலு கடலிலும் அலைந்து திரிந்தவற்றை
சிறுகச் சிறுக
கடல் தின்று தீர்த்தது.
தப்பித்து நீந்தியவைகள்
மாற்று நாட்டு அகதிகள் ஆகின.
இறுதியாய் வானைப் பிளந்து
மந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்
புதிய புதிய
மேய்ப்பர்கள் நாலாபுறமும் ......
நானே மீட்பர், நானே மீட்பர்,என
காதுசெவிடுபடக் கூவிச் செபித்தனர்.
வானத்திலிருந்து உங்கள் மேல் இறங்கிவரும்
புதிய மேய்ப்பர்களாகிய நாங்கள் புதிய உபாகமத்தை
உங்களுக்காய் உபதேசிக்கின்றோம்.
"உம்மைத் துரத்திய தேசத்தை நாமோ ,
புழுதியும் மண்ணுமாக்குவோம்.
அதை விட்டு உங்களை விலக்கிய
படியால்
அவர்கள் அழியவென நாங்கள் சபிக்கின்றோம்.
பூமியிலுள்ள
எல்லா ராஜ்யங்களிலும்
சிதறுண்டு போன எம் மந்தைகளே!!!
எங்களை ஆதரித்து ஆலிங்கனம் செய்வதால்
உங்களை வெல்வீர் - இன்றேல்
உங்கள் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும்
பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
அவைகளை விரட்டு வாரில்லாதோராய் நீங்கள்
துயரப்படுவீர்கள்.
உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும்
அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
அவர்கள் உங்களோடு கூட இராமல்
டிஸ்கோக்களிலும், மதுபானச்சாலைகளிலும் படுத்துறங்குவார்கள்..
மொழியை அழித்து முகத்தை இழக்கப்போகிற
அவர்களைச் சிறைப்படச் செய்வோம்.
உங்கள் நிலத்தின் கனியையும்,
உங்கள் பிரயாசத்தின் பலனையும்
நீங்கள் அறியாத ஜனங்கள் புசிக்கும் படிக்கு
நாங்கள் சபிப்போம்.
தப்பிய மந்தைகள் தடுமாறி நடுங்கின!!!
எங்கள் மேய்ப்பர்கள்.......
நல்லவர்களா??
கெட்டவர்களா ??
விடையறியாது தவித்தன
தப்பிய மந்தைகள்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-01-01


Join the Vaarppu Community

Log In Register

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube