கிராமத்தில் நான்.....
அப்போதெல்லாம் - என்
கால்களுக்கு பாதணி
தேவைப்படவில்லை முட்கள்
என் கால் கால்களின்
சினேகிதர்கள்
வானம்பாடிகளுக்கும் எனக்கும்
சின்ன சின்ன மனஸ்தாபங்கள்
யாத்திரைக்குச் செல்லும் எறும்புகளின்
தீனிகளை பறித்து - அவைகளுக்கு
பகைவனுமானேன்
கவனும் கல்லுமாய்
பறவைகலோடு சண்டை இட்ட
காலமது-அவைகளின்
பிள்ளை பிடி காரன்
என்றும் என்னக்கு ஒரு
பெயர் உண்டு - ஆனலும்
ஆட்டுக்குட்டிகளுக்கும்
என்னக்கும் அப்படி ஒரு
சினேகிதம்
புல் வெளிகளை கண்டால்
ஒரு குட்டித்து£க்கம்
செய்வது என்னக்கோரு
போழுது போக்கு
குரங்குகலை பார்த்து
மூக்கை சுரண்டி - அவைகளின்
கோபத்துக்குள்ளகி
பல மரக்கிழைகளை உடைத்த
குற்றச் சாட்டும்- என்னிடம்
இருக்கிறது
தோட்டக்காரன்
துரத்தும் போது
முள்வேலிகளுக்கு
இரத்த தானம் செய்த
முதல் சிறுவனும்
நானாகத்தான் இருக்க
முடியும்
தென்றல்.
- தென்றல்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01