"நானும் எனது குடும்பமும்"
------------------------------------------
வருகிற....
புது வருடத்தை முன்னிட்டு
நானும் மனைவியும் குழந்தைகளுமாக
ஒவ் ஒரு புடவைக்கடைகளாய்
ஏறி இறங்கினோம்.
எத்தனை கடைகள் என்று........
அன்னளவாக இப்போது – எனக்கு
ஞாபகம் இல்லை....
மூத்தவள் - கலர்
பிடிக்கவில்லை என்று.............
முணுமுணுத்தாள்.
இளையவள் - இது
மொடலிங் இல்லை என்று .........
மூஞ்சியை திருப்பி
உம்முண்ணு இருந்தாள்.
அடுத்தது – அக்காட
மாதிரியே எனக்கும் என்று..........
அழுதழுது அடம்பிடித்தது
.கடைசி என் கையைபிடித்து
அடிக்கடி இழுத்தது –அடுத்த
கடைக்கு போவோம் என்று.....
எல்லோரையும் விட – மனைவி
அலுப்பு கொடுத்தாள்.
அது பிடிக்கிதா......?...இது பிடிக்கிதா.........?..
என்று ...கேள்விகளை எழுப்பி
ஏதோ எல்லோருக்கும் ஒவ்வொன்று
வாங்கிக்கொண்டு - வீடு திரும்புகையில்
இரவாகிவிட்டது.
காலையில் யாரோ ....ஒருவனின்
அம்மா வருகிற
வயதாகிப்போன அம்மா தானோ என்று ....
நான் வாங்காமல் விட்டு வந்த – அந்த
வண்ண பட்டு புடவையைக் கட்டிக்கொண்டு.....
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-12-10