Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

வெள்ளாடுகளின் பயணம்

- துவாரகன்

வெள்ளாடுகளின் பயணம்
----------------------------------

ஆட்டுக் கட்டையை விட்டு
எல்லா வெள்ளாடுகளும்
வெளியேறி விட்டன.
கண்ட இடமெல்லாம் வாய்வைக்கும் என்று
என் அம்மா
ஒரு போதும்
வெள்ளாடுகளை வாங்கி வளர்ப்பதில்லை.

இப்போ அவை
பட்டுப்பீதாம்பரம் போர்த்திக் கொண்டு
ஊர் சுற்றுகின்றன.

சிதைந்துபோன கொட்டில்களில்
தூங்கி வழிவனவெல்லாம்
பறட்டைகளும் கறுப்புகளும்
கொம்பு முளைக்காத குட்டிகளும்
எனக் கூறிக்கொள்கின்றன.

தம்மைச் சுற்றிய
எல்லாவற்றையும் கண்காணிப்பதற்கும்
விடுப்புப் பார்ப்பதற்கும்
தம் வீட்டுத்தாயரின் தாவணிகளைப்
பங்குபோட்டுக் கொண்டு
எஜமானன் போல் வருகின்றன.

பட்டுப்பீதாம்பரமும்
ஆரவாரமும்
நிலையானது என்று
இதுவரை யாரும் சொல்லவில்லையே!

ஒருவாய்ச் சோற்றுக்கு அல்லாடுபவன்
கம்பிமீது நின்றாடும் நிலையில்
எங்கள் ஆடுகள்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-10-23


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்
  • நாய் குரைப்பு
  • கோழி இறகும் காகங்களும்
  • என்னை விரட்டிக் கொண்டிருக்கும் தலைகள்
  • தூசிபடிந்த சாய்மனைக் கதிரை நாட்கள்
  • எல்லாமே இயல்பாயுள்ளன
  • கண்களைப் பற்றி எழுதுதல்
  • வண்ணத்துப்பூச்சிகளின் உரையாடல்
  • புணர்ச்சி
  • முதுகுமுறிய பொதிசுமக்கும் ஒட்டகங்கள்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube