ஆயுதபூசை
-----------------
இன்று எங்கள் ஊரில்
ஆயுதபூசை
மேல்நாட்டாரின் அறிவியலால்
கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள்
அனைத்தும் கழுவப்பட்டன.!
எங்கள் அலுவலகக்
கணிப்பொறியும் தப்பவில்லை!
மஞ்சளோடும் குங்குமத்தோடும்
மாலைகளும் சூட்டப்பட்டன!
இனமானம் இழந்த எம்
தமிழரின் மூளைஆயுதம் மட்டும்
தூசுதுடைக்கப்படாமல்
அட்டகாசமாய் நிறைவேறியது
ஆயுதபூசை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-10-23