சின்னம்
-------------
நடக்கிறதெல்லாம்
உறுத்தறது இல்ல.
எத்தனை காலம்
கல்லாவும் மண்ணாவும் இருக்கிறது.
முடியல
இழந்து போனவர்களின்
எண்ணக் குவியல்ல
மூச்சுத்திணறுது
யாரை முன்னிறுத்திச் சொல்றது
சமாதானமும்
விருப்பங்களும்
முனுமுனுப்புகளும்
சாட்டுச் சொற்களும்
பழிவாங்களும்
இடிபாடுகளின் அழுகிய வாசத்தில்
நசித்துப் போயிற்று
நெனப்பு
இன்னைக்கும்
பார்வையைத் தெறிக்கிற
தூசியா இருக்குது
பதிலுக்குப் பதிலாகவும் இருக்கலாம்
எப்படிச் சொல்றது
அடுத்தவன் தகர்க்கும் போது
தோன்றுகிற அடையாளம்
இவன் தரைமட்டமாக்கிய போது
தெரியவில்லை
வண்ணத்தைக் கொள்ளும் வெண்மை
இவனின் சமாதானம்
என்னமோ
கையையும் காலையும்
சிதைப்பது போல் துடிக்கிறான்
அடயாளங்களுக்குள்
ஒளிந்து கொண்டு
உணர்வுக்கு மத்தியில்
அறிவை முன்னிறுத்தியவனை
மறந்த(இ)வன்
தசைகளை அழுகவிட்டு
வெறிக்கும் கூடு
எதிர்ப்புகள் வந்தாலென்ன
ஆள் சேர்க்கும் தந்திரம்
அடுத்தவனுக்கும் தெரியும்
கல்லும் மண்ணும்
முன்னதை நினைவுறுத்தும்
புராதனம்
இன்று சுயலாபம்
அவனுக்கும்.
வாழ்வாகாத
வாழ்வின் அடையாளங்களை
நீ வாழ இருத்தி அவமதிக்காதே
உன் எச்சமின்றி
வரும் தலைமுறையாவது
சுயமாய் இயங்கட்டும்
எதுவாவாவது.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-10-02