Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

கதை சொல்லிகள்

- எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

கதை சொல்லிகள்
----------------------------

எப்பொழுதுமே உணர்வுகளற்ற உருவங்களின்
மாயத் தோற்றங்களில் மறைந்து கொண்டே
உரையாட வேண்டியதிருக்கிறது கதை சொல்லிகளிடம்
நயமாய் சேகரப்படுத்தப்படும் வார்த்தை நயங்களில்
இலகுவாய் அமிழ்த்து விடுகிறார்கள் தங்கள் பாத்திரங்களை
கரு சேருமிடங்களின் மையப் புள்ளிகளையும்
அக் கருவைப் பேசும் உள்ளடக்கிகளையும்
சுலபமாய் அவர்கள் கணித்து விடுவதும்
தோற்ற மெலிவும் வாட்டப் பொலிவுமாயொருத்தனை
அசகாயச் சூரனாய்ச் சித்தரிப்பதும்
கதையின் நிகழாக்கத் தோற்றங்களிலிருந்து
போற்றச் செய்கின்றன அக்கதை சொல்லிகளை
மேற்காய் உதிக்கும் சூரியனை
உச்சிப் பகலில் சில விண்மீண்களை
மார்கழிப் புயலை
ஆடிப் பனியை
இப்படியான எல்லா அடிப்படையில்லா மூலக் கூறுகளும்
அபரிமிகு சாத்தியங்களாகிப் போகின்றன அவர்களுக்கு மட்டும்
சில வேளை அவர்களுடன் கதை கேட்டுக் கிடக்கையில்
திடீரென்று கக்கங்களில் முளைத்த சிறகுகளில்
பறந்து விடும் அவர்களைத் தேட வேண்டியதிருக்கிறது
அவர்களில் ஆயப்படும் நிஜங்களைப் போன்றே.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-09-14


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • தீவிரவாதம்
  • நிகழ்காலம்
  • இரயில் சிநேகம்
  • கனவுத் தூதுவன்
  • மாமிச உருவங்கள்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube