பிளவு
அவனைக் காணும் போதெல்லாம்
ஏற்படும் இயல்பது,
ஏதோ ஒரு கணம் நின்று
கதைபேசி
பின் பிணக்காகி
சிதறும்.
நம்பிக்கையற்ற நம்பிக்கை அது
அந்தரங்கத்தில் ஏற்படும்
அருவருப்பைப் போல சிதறுண்டு போகும்
குப்பிகளைத் தாண்ட விரும்பாத
புத்தி அது.
எல்லாவற்றையும் தாண்ட விளையும்
புத்தி இது.
எங்கே அந்த உருபிழந்த உருவங்கள்!
எங்கெங்கோ சிதறுண்டு
ஒட்டி வைத்த ஒட்டடைகள்
சொல்லாமல் தொடர்ந்து கொல்லும்
வேர்கள்
வேதனையில் சிதறுண்ட உருக்கள்
இவற்றுக்குள் வாழும் ஐந்துக்கள்
ஆதி தேடி நாங்கள்
-தான்யா
நன்றி: உயிர்நிழல்
- தான்யா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01