நிழல்.. நங்௯ரம்.. நீர்க்குமிழி
01.
நிழல்!
-----------
இருட்டு நிழல் தொடர்கிறது ....
ஒழுகும் வெளிச்ச சுவடுகளினூடே ....
உயிர் தப்பும் மரணம் ......
முச்சுக் காற்றின் வெப்பம்
சுவாச அலைகளாய் ஓட்டம் ......
சுழலும் காற்றாடி ........
சாயலின் சலனங்கள் ......
தீராத ஏக்கங்கள் ஒட்டி இருக்கிறது
ரத்த நாளங்களில் கூட ....
எண்ணச் சதுக்கத்தில் மலர்ந்தன
கல்லறைப் பூக்கள் .....
நிழல் நீள்கிறது.....
02.
நங்௯ரம்!!!
-------------------
நினைவுகள் பாய்மரம் விரிக்க ....
நங்௯ரமிட்டது தொலைந்து போன கனவுகள்
முன்னும் பின்னுமாய்
ஊஞ்சலாடியபடி
உள் வாங்குது எண்ண அலைகள் ....
அது ஒரு நிலாக்காலம் .....
உன் மூச்சை சுவாசித்த காலம் ....
கடிகார முள்ளாய் சேர்ந்தும் பிரிந்தும்
பகா பதமாய் தனித்து பொருள்படாமல்
இருந்த வசந்த காலம் .....
பயணங்கள் பட்டயம் எழுதிவிட்டு
பதுவிசாய் பதுங்க
மீண்டும்....
பழையன கழியாமல் ....
புதியன சேர்ந்தபடி!!!
03.
நீர்க்குமிழி
--------------
ஆழ்ந்தமனப்பரப்பில்
விட்டு எறிந்த
நினைவு கல் ஒன்று....
செதுக்கியபடி உள்செல்ல ....
வட்ட சக்கரவியூகம்
ஒன்றுக்குள் ஒன்றாய் விரிந்தபடி ......
ஆழ அமிழ்கையில் ....
மெல்ல
மேலே எழும்புது
ஓர் அடங்கலற்ற நீர்க்குமிழி!!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-05-02