ஒரு தாயின் சோகத்தில்....
மனமே மனித மனமே
இன்னமும் எதற்கு
இந்தச் சோகம்?
யார் உன்னை
அடித்தார்கள்?
உன்னை இந்தச்
சாக்கடையில்
தள்ளியவர்கள்..
இன்று சுதந்திரமாகச்
சுற்றித் திரிகின்றார்கள்.
அன்று உன்னை
அணைக்க மறந்தவர்கள்
உன் நண்பர்களா?
ஏன் உன் வாழ்வு
மரணித்திருக்கிறது?
உன் வாழ்க்கைப் புத்தகம்
மூடப்பட்டிருந்ததா?
அது என்றாவது
திறக்கப் பட்டு
படிக்கப் பட்டு
அதனால்
திருந்தப் போகும்
நிலை..உன் மறு
நண்பர்களுக்காவது
வரட்டும்..
அன்று நீ
திருந்தியிருந்தால்
இன்றைய சிறைக்கூடம்
வேறு யாருக்கோ
உபயோகப் பட்டிருக்கும்.
உன் வீட்டின் அறை
உனக்காகத் தான்
காலியாக இருக்கிறது.
நீ வரும் நாளில்
உன் மனமாற்றத்திற்காக
ஏங்கிக் கிடக்கும்
உன் தாயின்
கருணை உள்ளம்
இன்றும் உனக்காக
அழுகிறது.
நீயும் அழுது விடு
இனியேனும் திருந்தி விடு.
வாழ்க்கை உன்னை
மன்னிக்கக் காத்திருக்கிறது
நீ தயாரா?
தயவு செய்து தயாராகி
வெளியே வா.
இனியும் தவற வேண்டாம்..
தாயை நேசித்து வா..
-புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01