Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

பெரு மழைக்கு அல்ல.. தெளிவற்ற காட்சி

- இளங்கோ -கவிதைக்காரன் டைரி

பெரு மழைக்கு அல்ல.. தெளிவற்ற காட்சி என்னும் குற்றச்சாட்டோடு புலம்ப நேரிடலாம்..

01.
பெரு மழைக்கு அல்ல...!
-----------------------------

உள்ளங்கை பொதிக்குள்..
பத்திரமாய் உறங்கும் குழைந்தைகளின்
செவிகள் சேகரிக்கின்றன..

தூரத்து கரைகளில்..
வெடித்து அடங்கும் குண்டுகளின்
சப்தங்களை..

உயிர்களைத் துளையிட்டு
புதையும் துப்பாக்கி ரவைகளை
பிடுங்கி எரியும் வல்லமை
இனி எந்த விரல்கள் பெறுமோ
அறியோம்..

நம்பிக்கையோடு தாங்கி சுமக்கிறோம்..
பூமிக்கு வருகைத் தந்திருக்கும்
ஒவ்வொரு ராஜக்குமாரியையும்..
மௌனமாய் விழி உருட்டி..
கருகிய மரங்களின் இலைகளை உள்வாங்கி
பதியும் ராஜக்குமாரன்களையும்...

வேலிகளுக்கு வெளியே..
பூத்துவிடுதல் குறித்து..

ராணுவ பூட்சுகளின் கால்மிதி
சகதிகளுக்கு கீழே...
ஆழத்தில்..
புதையுண்டு கிடக்கின்றன விதைகள்..

அவற்றுக்கு உரமாய் ஆகிப் போயினர்
என் சகோதர சகோதரிகள்..

நாங்கள் காத்திருப்பது
பெரு மழைக்கு அல்ல..
சிறு தூறலுக்கு..!


02.
தெளிவற்ற காட்சி என்னும் குற்றச்சாட்டோடு
புலம்ப நேரிடலாம்..
-----------------------------------------------------------

புதையும் கனவின் ஈரச் சகதிக்குள்..
கால்களை மீட்டுக்கொள்வதான
பிரயத்தனங்களோடு முனகத் தொடங்கியது
ஒரு காட்சி..

வண்ணங்களைத் தேடி அலையும்
வேட்டை எனவும்..
அசைவுகளின் பதிவுகளை சுரண்டிப் பார்க்கும்
ஆவல் எனவும்..

வழித் தவறுதலுக்குரிய
காரணங்களை பக்கவாட்டு மரங்களில்
கிறுக்கி வைக்கிறது..

தெளிவற்ற காட்சி என்னும் குற்றச்சாட்டோடு
புலம்ப நேரிடலாம்..
படுக்கையிலிருந்து அலறியோ மருண்டோ
விழிக்கும் கணத்தில்..

இவைகளைத் திட்டமிட்டு
வாழ்வின் நொடிப்பொழுதுகளில் என்னிடம்
அனுப்பி வைக்கும் தருணங்களைக்
கைது செய்துவிடப் போவதாக

அனுமதி கேட்டு அரசாங்க வரிசைகளில்...
நிற்பதற்கான தீர்மானத்தோடு..

கழிவறைக் கண்ணாடி முன் நின்றபடி..
பற்களை பரிசோதித்து..
பற்பசை பிதுக்கியபோது..

கால்களை மீட்டுக்கொள்வதான
பிரயத்தனங்களோடு முனகத் தொடங்கும்
ஒரு காட்சி..

கண்ணாடியின் பாதரசக் குழம்பென
வழிந்து...உருகி...
சட்டென ஆவியாகி மறைந்தது.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-02-25


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • பிரிதலின் பசலையை நெய்யும்
  • ஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்
  • ஒற்றைக் கல்.. மௌனத் திரை.. ஜாடைத்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube