வண்ணத்து பூச்சி.. புரிதல்
01.
வண்ணத்து பூச்சி
-----------------------
ஒவ்வொரு முறையும்
உந்தன் தெருவினுள் வரும் போது
எனை கடந்து போகும்
வண்ண பட்டாம் பூச்சிகள்
வெண்ணிறமாய், மஞ்சளாய்
இன்னும் சொல்ல வொண்ணா நிறங்களில்
முகத்திற்கெதிரே வந்து
முணு முணுத்து போகும்.
அவை சொன்ன சேதி
விளங்கியதே இல்லை
வருடங்களுக்கு பிறகு
இன்று நீயில்லாத
அதே தெருவில்..
முணு முணுப்பின் அர்த்தம்
முழுசாய் புரிகிறது இன்று.
02.
புரிதல்
----------
ஒன்றன்
அருகில் உள்ள போதல்ல
ஒன்றை விட்டு
தூரமான பின்பே
ஒன்றைப் புரிய முடியும்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-12-15