அன்பானவனே!
ரோஜாத் தோட்டத்து
ராஜ மகனே!
நீயோ தொழுவத்தில்
தோன்றிய
தெய்வ குமாரன்.
பிதாவின் மகன்
மலைப்பிரசங்கத்தில்
மக்களை நீ தேடவில்லை
உன் மனத்தைத் தேற்றினாய்
உன் பிதாவின் திட்டத்தில்
திட்டவட்டமாய் பணிசெய்தாய்
இரத்தம், அத்தராய் மணக்க
வியர்வை பன்னீராய் மணக்க
முண்முடி சூட்டி உன்னை
தண்டித்தனர் யூதர்கள்..
சிலுவை கூட சிந்தித்தது
உன்னைத் தன் சிரசிலேற்ற..
அஸ்தமனத்துச் சூரியன் முன்
நிஸ்டூர நாடகம்
அரங்கேற்றம் கண்டதும் ஏனோ?
-புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01