நீ என் குழந்தை...
----------------------
வாப்பா என்றழைக்க
வந்துவிட்டாள்...
என் மகள் மரியம்..
நதியோடு பேசும்
புது ராகம் அவள்
நிலவோடு விளையாடும்
மழை மேகம் அவள்
பூக்களை நேசிக்கும்
சின்னப் பனி துளியவள்.
இரவென்ன பகலென்ன
அவள் இதழோரம்
புன்னகைதான்
பஞ்சுக் கரங்களால்
வருடும் மான்குட்டி
பிஞ்சிக் கால்களால்
உதையும் பூந்தொட்டி
என் ஆனந்த வாழ்வில்
அழகான பரிசு அவள்
தேவதைக்கு பிறந்த
தேன்-வதையவள்..
சோகத்திடலில்
விழுந்து கிடந்தேன்
பாசக் கடலாய்
வந்தாய் மகளே
நேசம் நிறைந்த
வல்லோன் இறைவன்
தந்தான் உன்னை
நீ என் குழந்தை.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-12-02