விடுதலை உணர்வு
உன்னை மீண்டும் முத்தமிட
என் உதடுகள் துடிக்கின்றன
உன் கரங்களை வருடி நாட்களாகிவிட்டது
ஒவ்வொரு காலையும் - நான்
கண்விழிககும்போது
நீ என் அருகில் இரு - நம்
வெப்பத்தில் எம் சிந்தனைகள் உலகெங்கும்
விரியும்
நம் விடுதலை உணர்வுகள் ஒன்றாக
புதிய எண்ணங்கள் உருவாகும்
நீ விரைவில் என்னிடத்தில் வந்துவிடு
-றஞ்சினி
- றஞ்சினி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01