Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

வலி தந்த மணித்துளிகள்

- சாமிசுரேஸ்

வலி தந்த மணித்துளிகள்
--------------------------------

தொடரூந்து நிலையம்
பெயர்ப்பலகை மாறுகிறது

காத்திருக்கிறேன்
கால்களின் கீழே சலசலத்தோடுகிறது நதி
நதியின் பெருக்கைத் தின்னாமல்
முக்கியங்களைத் தொலைத்து
மூலைக்குள் மனிதர்கள்

விடியலின் மரணத்துளிகளை விழுங்கிக்கொண்டிருக்கும்
இந்த சர்ப்பங்கள்
சில நொடிகளில் தூய்மையை இழக்கும்.

இருத்தலில் இல்லாத பொருளை
கனவுகளுக்குள் திணித்து
முடமாய் அலையவிடுவதில்
சுகம் காணும் வேலிகள் இவை.

தேடலில்லாத உலகம்
சுற்றளவுகளில் வலிக்கறது

நீண்ட கணப்பொழுதுகளில்
பார்வைகளின் முள் அதிர்வுகள்
மௌனமாய் எரியும்

சில மணித்துளிகளை அலையவிட்டு
கால்களை நிலையாய்ச் சொருகி
பூஜ்ஜியமாய் முடங்குகிறது காலம்

இந்தப் புதிய யுகம்
உன் இருப்புகளை விழுங்கிவிடும்
சந்தேகமில்லை
எதிர்கொள் மரணம் வருகிறது

ஒவ்வொரு முகங்களிலும்
வெவ்வேறு நிறங்களைப் பூசிக்கொண்டலைகிறது உடல்.

காத்திருக்கிறேன்
பெயர்ப்பலகை மாறிக்கொண்டிருக்கிறது

எனைச் சுட்டுப்பொசுக்கியபின்
நடுங்கியபடி அலைகிறது காற்று.

எனக்கெதிரே
உணர்வுகளின் வேற்றுமை வெளிப்பாடுகள்
ஒவ்வொன்றாய் தொங்கியபடி சுற்றின.

நான் வெட்கித் தலைகுனிகிறேன்.

ஆற்றுப்படுகையில்லா மைதானமாய்
அழுகித் தொலைகிறது இன்னொரு விதி.

நேரம் மறைகிறது
வழுக்கியோடிய அமைதியினூடே
மறைந்துகொண்டிருக்கிறது நதி

நெருப்புப் பூத்த மேனியனாய்
என்னுள் இருந்த
கடைசித்துளி சொற்களும் கரைய
இதுவே என் இறுதிச் சொல்லாயிற்று.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-09-21


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • நிழல் வலி

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube