Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

காதலில் தோற்றவன்

- சின்னு (சிவப்பிரகாசம்)

காதலில் தோற்றவன்
-------------------------

அன்று இஞ்சியும் இனித்ததடி
இன்று இளநீர் கசக்குதடி

நிலை கெட்ட பொழுதுகள்
தரம் கெட்ட செயல்களில்
தொலைத்த நாட்கள்
மனதில் வடுக்களாய் !

பெண்ணே உந்தன் பேரழகு
மனதில் ரணங்களாய் !

எத்துணை முறைகளடி
உனை அனைத்து பார்த்திருப்பேன்
மனதுக்குள் !

லட்சியம் இன்றி
அர்ச்சனை செய்தேன்
பேரழகாய் உனை ஆராதித்தேன்

முத்தழகு சித்திரம் என்றேன்
முடிவைத்த உன் அழகை
கட்டழகு கோபுரம் என்றேன்
கண்ணே உந்தன் முன்னழகை
வளங்கொண்ட நிலம் என்றேன்
பெண்ணே உந்தன் பின்னழகை

நீ விலகியது விளங்காமல்
காமம் நீங்கி காதலித்தேன்

கற்பனையில் வாழ்ந்து
சிந்திக்க மறந்தேன்

குடிப்பது குலத் தொழிலாய்
ஆத்திரம் என் பெயரின் சொல் பொருளாய்

புகைப்பது புது பழக்கம்
வெற்றிடத்தில் என் வாழ்வின் துவக்கம்


நண்பர்கள் தொலைத்து
நாணயம் இழந்தேன்

கண்ணிமை அசைவுக்கு
யாகங்கள் செய்தேன்

நெருப்பு சாம்பலாகி
விடியலில் குப்பையானேன்

விடிந்தபின்னே வேங்கையும் ஆனேன்
உண்மை சொன்னால்
இருந்தும் இறந்துவிட்டேன்
வாழ்ந்தும் மறைந்து விட்டேன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-08-30


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கடவுளை பார்த்திடில்!
  • பெண் பார்க்கும் படலம்
  • புதுமை பெண்
  • தலைவி..
  • ஆண்டவனுக்கு எச்சரிக்கை
  • அயல் நாட்டு இள.. கண்டதும் காதல்
  • உயிர்த்து எழு.. அழைக்கும்.. அழகு
  • அழகுச் சொல்லொன்று வேண்டும்
  • பூக்கட்டும் புதிய புன்னகை.. ஏன் சினம்
  • தனிமையில்.. பூக்கட்டும் புதிய புன்னகை
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube