என் காதலி வருவது போல்.. தோழி
01.
என் காதலி வருவது போல்
-----------------------------------
மறியல் செய்யும்
மாற்று கட்சியினரை
காலையில் கைது செய்து
மாலையில் விடுவிப்பது போல்
பரிதியை பகல் எல்லாம்
பிடித்து வைத்து கொண்டு
மாலையில் விடுவித்தது
மழை மேக மூட்டம்
வானம் வெள்ளைஒளி
லிட்மஸ் தாளை
மழையில் முக்கியது
கிழக்கே அது வானவில்லானது
நிலா வானவில்லை
வண்ண பென்சில் பெட்டிஎன மருவி
வண்ணம் கேட்டு அழுதது
அதன் கண்ணீரில் கடல் உருவாயிற்று
ஞாயிறு சிவப்பு வண்ணம்
எடுத்து கொண்டு
மஞ்சள் வண்ணத்தை
நிலவுக்கு கொடுத்தது
சிதறிய சிவப்பு வண்ணங்கள்
செல்போன் கோபுர சிவப்பு விளக்கானது
சிதறிய மஞ்சள் வண்ணங்கள்
தெருவெங்கும் சோடியம் விளக்கானது
மஞ்சள் முழுநிலா
நட்சத்திர கூட்டத்தில் வருவது
மின்மின்மினி பூச்சி அலையும்
ஒற்றை அடி பாதையில்
என் காதலி வருவது போல்
மகிழ்ச்சி உருவாக்கியது
02.
தோழி ழிழிழிழிழிழிழிழிழிழிழிழி
-------------------------------------
என்னுடன் பேசி
கொண்டிருக்கும் தோழிகளை
பிரித்து அழைத்து சென்று
விடுகிறாய்
நான் மேடை ஏறவிருந்த சமயம்
மின்சாரம் போய்விட்டதில்
மகிழ்ச்சி கொண்டு சொல்லி
திரிகிறாய்
தேர்வுகளில் உன்னைவிட
மதிப்பெண் குறைய பெற்றால்
என் திறமையை எள்ளி
நகையாடுகிறாய்
தேர்வுகளில் உன்னைவிட
மதிப்பெண் அதிகம் பெற்றால்
தேர்வுதாளை பறித்து மறுமதிப்பீடு
செய்கிறாய்
என் தண்ணீர் பாட்டில் நீரை முழுவதும்
வகுப்புதோழி மிச்சம் வைக்காது
குடித்துவிட்டது கண்டு கை கொட்டி
சிரிக்கிறாய்
என் சின்ன இழப்புகள் கூட
உனக்கு பெரிய மகிழ்ச்சி தருகிறது
என் சின்ன சின்ன சந்தோஷம் கூட
உனக்கு பெரும் கோபத்தை உண்டாக்கிறது.
உன்னை எனக்கு தெரியாத
உனக்கு எனனை தெரியாத
வேளையில் நாம் இருவரையும்
சரியா தெரியாதஒருவர்
எனது மேல்நிலை பள்ளி மதிப்பெண்ணை சொல்லி
உன்னை அவமானபடுத்தியதற்கு
என்னை பழிபீடத்தில் வைப்பது நியாயமா
தோழி ழிழிழிழிழிழிழிழிழிழிழிழி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-08-11