பிறந்த ராசி
------------------
வீதியின் ஒற்றை
சாலையில் ஓரமாய்
கால்கள் நடந்தாலும்
நிற்கவில்லை என்
பிறப்பினை ஒட்டிய
துக்கங்கள் .....
யார் சொன்னது ?
நான் தீண்டபடாதவன்
என்று ?தீண்டிகொண்டேதான்
இருக்கிறார்கள் என்னை
வார்த்தைகளால் .........
எஜமானின் பத்து வயது
பையன் என்னை
அழைக்கும் அந்த
ஒருவார்தையின் வீரியத்தில்
என் சுயமரியாதை மொத்தமாய்
செத்து போகிறது ..
எல்லாம் நான்
பிறந்த ராசி ...
-மகி' "தம்பி பிரபாவின் தம்பி'
- மகி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-07-24