Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

மறுபக்கம்

- ப.மதியழகன்

மறுபக்கம்
-----------------

காற்றுக்கும் மறுபக்கம் உண்டு
புயலென புறப்படுவது
தென்றலின் மற்றொரு வடிவம் தானென
நீங்கள் ஏற்கனவே அறிந்த ஒன்று.
கடலுக்கும் மறுபக்கம் ஒன்றுண்டு
இதமாய் கால்களை வருடிச் செல்லும் அலைகள்
ஒரு கறுப்பு நாளில் புறப்படும்
ஆழிப்பேரலையாய் ஆக்ரோஷம் கொண்டு...
நிலத்துக்கும் மானிட இனம் அஞ்சும்
மறுபக்கம் ஒன்றுண்டு
நமக்கு அபயமளித்துக் காத்துவரும் இப்புவியே
பூகம்பத்தால் விழுங்கும்
குவியல் குவியல்களாக
அப்பாவி மக்களை உயிரோடு...
அக்னிச் சுடருக்கும் மறுபக்கம் உண்டு
குடும்பமே தீயின் கொடிய நாக்குகளுக்கு இரையான
எண்ணற்ற துயர சம்பவங்கள்
இம்மண்ணில் நடந்ததுண்டு.
வானுக்கும் மறுபக்கம் உண்டு
நாமனைவரும் வியந்து பார்க்கும் வானமே
விண்கற்கள் மூலம் விஸ்வரூபம் கொண்டு
நம்மோடு நேரடி யுத்தம் புரிவதுண்டு.
மனிதனுக்கும் மறுபக்கமுண்டு
சரித்திர நாயகர்களது
சில ரகசியங்கள் மற்றர்களுக்குத் இறுதிவரை
தெரியாமலேயே
அவனோடு அவனுடைய அந்தரங்கமும்
கல்லறையில் புதைந்து போவதுண்டு.
மண்ணில் வந்து பிறந்திட்ட
சின்ன சின்ன அரும்புகளிடம்
மறுபக்கத்தை தேட இயலுமா?
சமுதாயம் அந்தக் குழந்தைகளை
கூர் நகங்கள் கொண்ட கருமையான
தனது கொடிய கரங்களால்
அரவணைக்கும்போது
அப்பிஞ்சுகளுடைய அகமும், புறமும்
முற்றிலும் வெவ்வேறாக,
கோரமாக மாறிப்போக
நூற்றுக்கு நூறு சதவீதம்
வாய்ப்புண்டு!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-07-24


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கடவுள் தந்த பரிசு.. தியாகத்தின்
  • நல்லதோர் வீணை.. புயலுக்கு பிந்தைய
  • தேவனின் திருக்கரம் .. நடைவண்டி
  • பாட்டுக்கு ஒரு தலைவன்
  • என் தேவதை இருக்குமிடம்
  • வானமெங்கும் வஞ்சியின் வடிவம்
  • உறக்கமற்றவனின் விடியல்
  • சபிக்கப்பட்டவனின்.. விடியல்
  • இறுதி இரவும்.. விளையாட்டுச் சங்கிலி
  • முடிவை நோக்கிய நெடிய பயணம்.. நான்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube