Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

வாழ்க்கை ஒரு கனவு !

- அரவிந்த் சந்திரா

வாழ்க்கை ஒரு கனவு !
-----------------------------

திசையிலா வெளியில்
திகைத்திடும் கும்பல்
கனவுகள் நினைவாய்
களித்திடும் கூட்டம்
வரும் நொடி அறியா
த்ரிகால ஞானியர்!
தத்துவ தூற்லால்
தழைத்திடும் தலைமுறை
வாழ்க்கை ஒரு கனவு
வாழ்க்கை ஒரு கனவு
பாதையின் ஒரு நுனி
தொடக்கம் என்றால்
பாதையின் மறு நுனி
முடிவு !
தொடக்கமும் முடிவும்
இயல்பே!
கனவின் தொடக்கம்
உறக்கம் என்றால்
கனவின் முடிவு
விழிப்பு. !
வாழ்க்கை ஒரு கனவு !
வாழ்க்கை கனவில்
தொடக்கம் விழிப்பு
உறக்கம் முடிவு
வேடிக்கை பார்த்தீரா
வாழ்க்கை கனவில்
தொடக்கம் விழிப்பு
உறக்கம் முடிவு !
போலி மனத்தின்
போக்கிரித் தனமும்
பொய்யும், புரட்டும்
வாடிக்கையான
வம்புப் பேச்சும்
வறட்டுத்தனமான
வேதாந்தங்களும்
வாழ்க்கை !
வாழ்க்கை ஒரு கனவு !
பயந்து , பதுங்கி
பாம்பாய் அடங்கி
நினைப்பதையெல்லாம்
திருட்டுத்தனமாய்
உறங்கும் போது
ஆட்சி நடத்தி
காட்சிகள் காணும்
உள் மனம் ! - அதற்கு
கனவே வாழ்க்கை !
கனவே வாழ்க்கை !
பகற் கனவாயினும்
இராக் கனவாயினும்
துன்பம் எனினும்
துக்கம் எனினும்
தூக்கம் வேண்டும் !
தூக்கம் வேண்டும் !
தூக்கம் கொண்ட
மனிதர் வேண்டும் !
கனவைக் காண்பது
மனிதர் என்றால்
வாழ்வாம் கனவை
காண்பவர் எவரோ?
மனிதனைப் படைத்து
மனிதனை நினைக்கும்
இறைவனின் கனவு
வாழ்க்கை !
வாழ்க்கை ஒரு கனவு
தூங்கா இறைவனின்
கனவுதான் முடியுமா?
தூங்கி இருந்தால்
தோன்றியதென்னாள்?
வாழ்க்கை தொடர்ந்து
முடிவது கண்டோம்
முடிந்திடும் கனவே
முடியாக் கனவா?
உடல் சாஸ்வதமாய்
ஊன்றிப் பார்த்தால்
வாழ்க்கை கனவில்
முடிவுகள் உண்டு
இறைவன் கூட
தூங்கி விழிக்கும்
கனவுகள் காணும்
சராசரி மனிதன் !
ஆனால் -
ஆத்ம சிந்தனை
செய்து பாருங்கள்
வாழ்க்கை கனவில்
படுவது உயிர்கள் !
ஆத்மா என்பது
அழியாதது !
ஆத்மா என்பது
உள்ள வரையிலும்
வாழ்க்கை கனவு
முடிவது எப்படி?
தூங்கும் இறைவனின்
தொடர்ந்த கனவு
தூங்கும் சிவத்தின்
சக்தியே கனவு !
இதனை விட்டொரு
படும் உயிர் நினைத்து
"இறைவன் தூங்கினான்
இறைவன் தூங்கினான்"
என்று பித்ற்றுதல்
எப்படி ஆகும்?
உடலை நினைத்து
வாழ்க்கை ஓட்டி
களித்து மகிழும்
இவர்கள் பேச்சு
தத்துவ கங்கையில்
கொசுவின் முட்டை !
புலை குணம் கொண்டார்
இவருக்கு இந்த
தத்துவம் புரிவது
கடினம்
"வாழ்க்கை ஒரு கனவு
வாழ்க்கை ஒரு கனவு"
போதும் விடுங்கள்
போய்த் தூங்குங்கள் !
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-07-23


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • உடலும் உயிரும்.. மரணம்
  • குழந்தையின் சிரிப்பு.. பூவே

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube