அன்னையும் நீயே
வானத்தில் நிலவு காட்டி
வளர்க்கப்பட்ட என் பிஞ்சு பருவம்
பூவாய் மலர்ந்த வேளை
வானத்தில் பம்பர் காட்டி
தறி கெட்டு ஒட வைத்தது
பிஞ்சுப் பாதம் பட்டு சித்து
என் பெற்றோர் - கொழுத்தும்
வெயிலில் வெந்து போன
பாதத்தை பாத்து தடவக்கூட
கைகளற்று போன போதுதான்
என் மனமும் வெந்து பேனது.
பள்ளிப்பாடப் புத்தகம்
சுமக்கும் வயதில் என்
பாசச்சுமைகளை சுமக்கும்
நிலைக்கு உள்ளானேன்
இறைவன் திறந்த கண்ணில்
இரண்டு சுமையும் இறக்கப்பட்டது.
வழிமாறிய என் பட்டு வாழ்க்கை
சிட்டாக சிரித்து மீண்டும் கை வந்தது
ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் அருளால்
கருனை
காட்டிய என்தாயே காப்பாயே
என்றும் என்னை நீயே.
முருகேசு ஜீவா
*****
அன்பகம் - திக்கற்றோருக்கான காப்பகத்திலிருந்து ஒரு குழந்தைக் கவிஞர்
http://www.changetheirlife.org/orphanage/A_anpagam_%20poems.asp
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01