காத்திருப்பு.. காதல்
01.
காத்திருப்பு
-----------------
பருவம் தவறாத
மழையில் ,
பருவமங்கை நீ
வரும் வழியில் ,
என்னுடன் நனைந்தன ,
பச்சை தாமரை
இலைகளின் மேல்
இச்சை கொண்ட மேகங்கள்
இறங்கி வந்தமர்ந்த
விடிகாலை பனித்துளிகள்...
எனக்குப் பின்
அவைகளும் தெரிந்து
கொண்டதோ இவ்வழியே
நீ வந்துபோவதை ...
என்னிரு கருவிழிகளை போல்
தேவதை உன்னை
தன்னில் சுமக்க
காத்திருக்கின்றனவே அவைகளும் !!!...
02.
காதல்
----------
நேற்று மாலையே
முடித்து வைத்த
வீட்டுப்பாடங்களை
சுக்குநூறாய் கிழித்தெரிந்துவிட்டு
வகுப்பறைவிட்டு வெளியேறுகிறேன்
ஏற்கனவே வெளியேறிவிட்ட
உன்னை
தனிமையில் சந்திப்பதற்காக...
எனக்கு மிகவும் பரிச்சயமான
கல்லூரியில்,
அதிகம் பரிச்சயமில்லாத
உன்னுடன் பகிர்ந்துகொள்ள,
மிகவும் பரிச்சயமான
என் தாய்மொழியிலோர்
கவிதை கிட்டாவிட்டாலும்
குறைந்தபட்சம்
நான்கைந்து வார்த்தைகளாவது
கிட்டியிருக்கலாம்...
தயங்கி வேர்த்தோதுங்கிய
சில மணித்துளிகளில்
உன்னைச்சூழ்ந்துகொண்ட
தோழிகளுடன் நீ
கதைபல கதைப்பதைப்பார்த்து
சற்றே தள்ளி நின்று
நடத்திக்கொண்டிருந்தேன்
மனதிற்க்குள் ஓர் விவாதம்
'ரோஜாப்பூவுக்குப் பேச
யார் கற்றுக்கொடுத்தது'....
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-07-02