பங்கருக்குள் இருந்து ஒரு மூச்சுக்காற்று
----------------------------------------------------
கனரக பீரங்கிகள்போல் அதிர்ந்து எழுகின்றன
பேச்சுக்கள்.
தலைக்குமேல் "செல்" போல் கூவிச் செல்கின்றன
அறிக்கைகள்.
"கிளஸ்தர்" குண்டுகள் போல் சிதறி விழுகின்றன
உறுதி மொழிகள்.
கூத்தும் கரணமும்
இது ஒரு தேர்தல் காலம்;;
இழப்பும் அவலமும்
எமக்கு யுத்தகாலம்.
நேற்றைய பேச்சு
இன்று இல்லை
இன்றைய உயிர்
நாளை இல்லை.
நாங்கள் இழப்பது
நீங்கள் பெறுவதற்கு
இழப்பதோ உயிர்கள்
பெறுவதோ வாக்குகள்.
போதும்!
எதிர்பார்த்து ஏமாந்து போவதிலும்
எதிர்கொண்டு எழுவதே மேல்.
- தம்பா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-05-15