சீம்பால்
----------
"ஏனுங்க அப்பா
வெல்லக்கட்டி வச்சிருக்கேன்
கடும்பு குடிக்கனும்
செவல எப்போ கன்னு போடும்?"
"மூனு நாளு ஆவுமடா
நாய் வரமா பாத்துக்கடா
ஆச்சி வரச்சொன்னாக
சேதி கேட்டுட்டு வந்துடறேன்"
"எல நாவைய்யா...
பெரிய பாப்பா வருதுடா
சீம்பாலுக்கு சப்பு கொட்டும்
பேரப்பயலும் ஆசப்படுவான்
செவலய ஓட்டியாந்து
தொழுவத்துல கட்டிபுடு"
ஈயெறும்பு அண்டாம
வெல்லம் காத்திருக்கு.
-- நம்பி.
- நம்பி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01