அந்தநாள் கதாநாயகன்
-------------------------------
நரம்புகள் புடைத்த நின்ற
அவன் உதிரம்
நடுங்கித் துடித்தது...
பஞ்சடைந்துபோhன அவன் கண்கள்...
உனக்கும் எனக்குமாக
உலகத்தைக் காப்பாற்ற
துப் பாக்கியைப் பிடித்த
அவன் கரங்கள்;
சண்டைப் பிளேனைப் பறக்கவிட்ட
பழைய காட்சிகள்
வீரமும் வெற்றியும்
வதைகளும் வலிகளும் அவனிடத்தில்...
அந்தச் செவிட்டுக் காதுகளில்...
நினைவில் வரும் அந்த யுத்தம்…
வரண்ட குன்றுகள்…
பசுமைதேடி அலையும் கண்களில்
பாலைவனம்;
சுருக்கி வருத்துகின்ற காய்ந்த தோல்கள்…
வரண்ட சூட்டில் மயக்குகின்ற
தாகத்தின் கொடுமை…
திறந்த ஊனத்துக் காயங்கள் …
வருந்தி முனகிய தோழர்கள் …
மரணப் பார்வைகள்…இன்னும் இன்னும்...
இன்றும் எப்படி எம்மால் மறக்க முடியும்?...
குறாவும் குளிரில்
இரும்புகளைச் சுமந்த சமுத்திரம்
உயிர்களைக் காப்பாற்ற என்றுதான்
தொங்கிய தோணிகள்…
பிரமாண்டமான பயங்கர ஓசை
நெருப்பைக் கக்கி உயிர்கள் பொடியாக...
கொடுமை
ஹிட்லரின் கட்டளை
கடமையில் கப்பலோட்டிகள்....
அமைதியில் வாடிக்கையாகும்
அவளின் அவசர சிகிச்சை...
அவனுடன் அந்தப் போராளியுடன்
மின் மினிப் பூச்சியாக அவள்
இடையிடையே இரவு வேளைகளில்
இனம்புரியாத பாலை வெளிகளில்...
என்றுமே கேட்டிராத வெடிச்சத்தம் ஒருநாள்...
செவிடாக்கியது ஊமையாக்கியது
அவன் வானத்தில்; ப+வாகினான்;...
உடலைக் கதகதப்பாக்கி
புணர்ந்த உறவுகளால்
குமைந்தது அவள் எண்ணங்கள்....
இருளாகி உருகும் அவன் பிம்பத்தை
யாரிடமும் விபரிக்கவில்லை அவள்...
அந்த வாரிசுகள்
நிட்சயம்
மரியாதைக்குரியவர்கள்
தேவைப்பட்ட போதெல்லாம்
விழி மாற்றிஇ வழிமாற்றியவர்கள்
திகைப்புற்;ற அந்த
காலப்பதிவுகளில்
குருதியில் நனைந்தவர்கள்
அந்தக் கதாநாயகனின் கனவால்
அவளின் மனசு கேவியது
அடக்கப்பட்டவர்களின்
அன்றைய விருதுகள்
அது ஒரு மாற்றத்தின் விழுது
அவை ஒரு நினைவா?…
இன்னும் அவை பயணிக்கிறதா?...
2.5.2009