Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

வல்வரசாகும் இந்தியா

- வைரபாரதி

வல்வரசாகும் இந்தியா
-----------------------------

ஞாலத்தின் மாமேதையே!
ஞாயிறென நடமாடும் ஜோதியே!
காலத்தால் அழியாத காவியமே - தங்கள்
கால் பணிந்து பாடுகிறேன் கவிதை...

காலையில் சுருங்கிய படுக்கையாய்;,
கசங்கிக் கிடக்குது நம் பூமி.
நாளை மாறும் நம்பிக்கை உண்டு,
நல்லோர் உம் விழிகள் கண்டு
எழுதுகிறேன் என் உணர்வை....!

விரல்களால் வேலி போடுவோம்
விளக்கெனும் வல்லமை ஜோதிக்கு - உம்
அருளால், அத்தீப சுடரால் - நம்
அகிலம் நடைபோடும் அப்பாதைக்கு!

சூரியன் கிழக்கே வரமறுத்தால்
சுதந்திர இந்தியாவுக்கு ஏது விடியல்?
பாரினிலோர் நல்லிடத்தை நம் பாரதம்
பாராமல் இறக்கமாட்டேன் இம்மண்மடியில்!

ஈராயிரத்து இருபதுவரை பொறுக்கலாமா?
ஈங்கிருந்தே சாதிக்கப் புறப்படுவோம் - நம்முள்
ஓராயிரம் அப்துல்கலாம் இருப்பதனால்
ஒளி மங்கிய வல்லரசில் ஒளியேற்றிடுவோம்!

சிகரத்தின் மறு பெயர் உச்சிமலையே - அதில்
இன்னொரு சிகரம் நம் உச்சந்தலையே!
'அ" கரமே முதலெழுத்து போலும் - நம்
அகிலம் வெல்ல வெகுதூரமில்லை அந்நாளும்!

தலையொன்றுக்கு ஐந்தாயிரம் வேண்டுமாம்
தரணி வங்கியில் நம் கடனொழிய - நம்
கலை நட்சத்திங்கள் வருமானால் கோடிகளுண்டு - அதில்
கர்ணன்மார்கள் யாருண்டு?

இருந்தும்....

உலைக் குமிழ்களுக்கு மூடியிட்டாலும் அதன்
உத்வேக முயற்சியால்; முட்டித்திறக்கும்
இளைய வருகையின் இனிய துணையால்
இந்தியா வல்லரசாகும் நாள் பிறக்கும்!

துணிவினை மனதில் கொள்வோம் - எல்லா
துறைகளிலும் வெல்வோம்
இனி வறுமை ஒழிந்து போகும்
இந்தியா வல்லரசாகும்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-05-01


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • பாரதீ ஓர் ஜோதி .. சில நேரங்களில்
  • பெண்ணினமே கேளீர்
  • இன்றைய பெண்கள்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube