நாய்களின் கால்களில் விதவிதமாய்ப் படைக்கலங்கள்
---------------------------------------------------------------
1
நாய்கள் எம் முற்றத்தில்
தலையுயர்த்தி ஊளையிடும்
நடுவீட்டில் கழிவகற்றும்
கண்ட இடத்திலெல்லாம்
பெட்டையுடன் புணரும்
நாய்கள் எமைக் கண்டால்
உறுமும் குரைக்கும்
நன்றிக்கொரு தடவை
இலக்கணத்தைத் தான் வரையும்
தன் காவல் பெரிதென்று
தவண்டை கொட்டித்
துள்ளிவிழும்
இவ்வீனச் செயலனைத்தும்
தலைகவிழ்ந்தே பொறுப்போம்
2
கல்லெடுத்து வீசும்
எண்ணத்தைக் கைவிடுவோம்
‘அடீக்’ கென்று விரட்டுகிற
சினமதையும் தவிர்ப்போம்
ஏனென்றால் இப்போதோ
நாய்களின் கால்களில்
விதவிதமாய்ப்
படைக்கலங்கள்
-இராகவன்
- இராகவன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-03-28