மழை சோவென பெய்து
-----------------------------
மழை சோவென பெய்து
ஓய்ந்து இருந்தது
மழைத்துளிகள் கூரையின்
விளிம்பில் முத்துக்களாய்
கோர்த்து நிற்கின்றன
மழை அடித்து
காற்று தூயிமைஆயிற்று
தெரு வெளிச்சம்
தூக்கலாக இருந்தது
தூரத்தில் லெவல் கிராசிங்
மூடும் ஒலி தெளிவாய் கேட்டது
முன் இரவு அமைதியாய்
தொடங்கியது
அரைஇறுதி கணக்கு
பார்க்க தோன்றியது
மனவான நீலத்தில்
இளம் இருள் கவ்வியது
மறதியாய் அசையா
வெண் மேகங்கள்
நற்செயல்களாய்
நட்சத்திரங்கள்
துர்செயல்களாய்
இருள்கவ்விய கீழ்வானம்
வெளிச்சம் மட்டும்
வாழ்க்கை இல்லை
-வி. பிச்சுமணி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-03-08