வாழ்க்கை
---------------
என் அம்மா எங்கே இருக்கின்றாய் .?
நானும் நீயும்
அப்பாவும் தம்பியும் அனைவரும்
அன்பாகத்தானே இருந்தோம்
ஊரெல்லாம் ஓடிக்களைத்த
என் மனதில் நீயும்
உன் அன்பும் ...
உறவுகள் நீங்கிய உலகில்
சூனியமாகிவிட்டது வாழ்க்கை
பதுங்கு குழி வாழ்க்கை
பயமாயுள்ளது அம்மா !
மீண்டுமொருமுறை தருவாயா கருவறையை
வேண்டாம் !
வானிலிருந்து காற்றின் திசை பிளந்து
இறங்கும் குண்டுகளுக்கு தெரியவா போகிறது ...?
வித்தியாசம்
பதுங்கு குழிக்கும் கருவறைக்கும் ....!
-கா.ஆனந்த குமார்
தமிழ் ஆய்வாளர்
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் -46
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-02-18